திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி திமுக பேரூர் இளைஞர் அணி சார்பில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தமிழகத் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆயக்குடி பேரூர் செயலாளர் சின்னத்துரை பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்தன் துணைத் தலைவர் சுதாமணி கார்த்திகேயன்
பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் நியாஜ் அகமது மற்றும் சையது இப்ராஹிம் கிருஷ்ணமூர்த்தி செல்லதுரை, துரையன், நிஜாமுதீன், தமிழரசு, அரவிந்த் கண்ணா, பொன்.பரந்தாமன், சரவணா காசி,ஆனந்த், மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் நல்லாட்சி புரிந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் திமுக மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.