M/s பரிவார் டெய்ரீஸ், M/s அன்லைட் லிமிடெட் மற்றும் M/ s PDA அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி/ வைப்புத் தொகைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக CBI வழக்குகளைப் பதிவு செய்தது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவின் மூலம், பணம் செலுத்திய அசல் சான்றிதழை நோடல் அதிகாரிகள் மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறக்கட்டளையில் டெபாசிட் செய்து அசல் வைப்புச் சான்றிதழுடன் கடைசி தவணை கட்டண ரசிதையும் வைத்திருக்கும் நபர்கள் அல்லது முதிர்ச்சியடைந்த வைப்புச் சரன் சான்றிதழ்/ ஒப்புதல் அசல் ஆவணங்களைக்கொண்ட நபர்கள் பின்வரும் தற்காலிக அட்டவணையின் படி அத்தகைய அசல் ஆவணங்களை சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் ஒப்படைக்கலாம்.
மேலே அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணை தற்காலிக மானது. இது எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக மேற்கண்ட அட்டவணையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது சிபிஐ இனைய தளத்தில் அறிவிக்கப்படும்.
அசல் ஆவணங்களை ஒப்படைக்கும் போது, முதலில் சிபிஐ இணைய தளத்தில் பரிவார் டெய்ரீஸ் அன்லைட் லிமிடெட் PDA அறக்கட்டளை அசல் வைப்புச் சான்றிதழ் இயக்கம் என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றப்பட்ட படிவத்தை இரண்டு நகல்களாக பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு அசல் ஆவணங்களை குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் ஒப்படைத்து ஒப்புகை பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் அல்லது தெளிவு தேவைப்பட்டால் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, மத்திய புலனாய்வு துறை பிரிவை 044- 24461959 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இடம்:-
மதுரை மாவட்டம்- மத்திய புலனாய்வுப் பிரிவு, ஊழல் தடுப்புப் பிரிவு 73, அத்தி குளம் மெயின்ரோடு, ராம்நாடு, ரிசர்வ் லைன், அத்தி குளம்- மதுரை 625007.
தேதி 19.05.2025 முதல் 31.05 25 வரை.
நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
தேனி மாவட்டம்:-
அறை எண். A4, தரை தளம், மாவட்ட திட்டமிடல் அலுவலகம், மாவட்ட எஸ். பி. அலுவலகம் அருகில்,
தேனி. – 625531
தேதி:- 02.06. 25 முதல் 06.06.25 நேரம் காலை 10.மணி முதல் மாலை 5 மணி வரை.
