திருநெல்வேலி, செப். 22:-
நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக்கூட்ட அரங்கில், இன்று ( செப்டம்பர். 22) காலையில், வாராந்திர “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் பங்கேற்று, மனுதாரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு, மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி ஆபரேட்டர் வீல் சேர்களை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர்ஃமா. சுகன்யா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில், கலந்து கொணடனர்.
திருநெல்வேலி மாவடட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்.
