மதுரையில் நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை மார்க்கெட்டில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் பெண்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள்.
வேலை செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள்.

இதனால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் மேலும் திறக்க படாமல் இருக்கும் பொது கழிப்பறை அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.
பொது கழிப்பறை திறக்க வேண்டும் என்று மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
