Headlines

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! மாணவ- மாணவிகள் மொத்தம் 728 பேருக்கு, விழா மேடையிலேயே வேலை நியமன ஆணைகள், வழங்கப்பட்டன!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! மாணவ- மாணவிகள் மொத்தம் 728 பேருக்கு, விழா மேடையிலேயே வேலை நியமன ஆணைகள், வழங்கப்பட்டன!

திருநெல்வேலி:

திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழகம், இன்பேக்ட் ப்ரோ டிரைனர்ஸ் [ INFACT PRO TRAINERS ], கேம்ப்டெக் [CAMBTECH ] பயிற்சி – வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து நடத்திய, மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் [ MEGA JOB FAIR-2025 ] நேற்று (ஜூலை. 5) பிற்பகலில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, வ.உ.சிதம்பரனார் அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந்த முகாமில், முன்னணி நிறுவனங்கள் மொத்தம் 91 பங்கேற்றன. பட்டதாரி மாணவ- மாணவிகள் மொத்தம் 2 ஆயிரத்து 753 பேர், நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். அவர்களில், ஆயிரத்து 323 பேர், முதற் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் , 728 பேருக்கு, விழா மேடையிலேயே, நியமன ஆணைகள் (Spot Offer Letters) வழங்கப்பட்டன.

ஆணை வழங்கும் விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர் ]
மு.அப்பாவு, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் “முனைவர்” கோவி செழியன், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, வேலைவாய்ப்பு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர்களுக்கு வாழ்த்தும்- பாராட்டும் தெரிவித்தனர். முன்னதாக, “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழக துணைவேந்தர் “முனைவர்” ந. சந்திரசேகர் தலைமையுரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார்.

பல்கலைக்கழகப் பதிவாளர் “முனைவர்”,ஜே. சாக்ரடீஸ், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் “முனைவர்” கு. அண்ணாதுரை, வாழ்த்துரை வழங்கினார். விழாவில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராம கிருஷ்ணன், மற்றும் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகந்தி, மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி, மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா ஆகியோர் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

விழா நிறைவில், பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அலுவலர்கள் “முனைவர்”வே.சுந்தர ராமன், “முனைவர்” வே.தினேஷ்குமார் ஆகியோர், அனைவருக்கும் நன்றி கூறினர்.திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *