Headlines

பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி

பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி

பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இயற்கை காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.
உடுமலை அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (52) தனியார் பேப்பர் மில்லில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 7.3 23 அன்று பணியின் போது மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த 26. 1. 21 முதல் இ எஸ் ஐ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். இதனை அடுத்து இ எஸ் ஐ கோவை துணை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிக்குமார், துணை இயக்குனர் பெருமாள், ஆகியோர் இதை தொழில் சார்ந்த விபத்தாக கருதி மணிவண்ணன் குடும்பத்திற்கு 8.3 .23 சான்றோர் உதவி வழங்க ஆணை பிறப்பித்தனர்.
அதன்படி மணிவண்ணன் மனைவி மகன் மற்றும் தாய்க்கு மாதந்தோறும் ரூ 12,452 பகிர்ந்து அளிக்கப்படும் மேலும் நிலுவைத் தொகை ரூ 2 லட்சத்து,25ஆயிரத்து,347 ரூபாய்க்கான காசோலையை மணிவண்ணன் குடும்பத்தினரிடம் உடுமலை இஎஸ்ஐ மேலாளர் சரவண பிரசாத் வழங்கினார். அப்போது அலுவலர்கள் லால் சங்கர், ரமேஷ் ,ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து இஎஸ்ஐ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இஎஸ்ஐ சட்டம் 1948 இன் படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட எந்த ஒரு நிறுவனமும் தொழிற்சாலையும் இஎஸ்ஐ சட்டத்தின்கீழ் பதிவு செய்ய வேண்டும் மாதம் ரூ 21,000 வரை ஊதியம் பெரும் தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்றவர்கள் ஆவர் ஒரு காப்பீட்டாளர் பணியின் போது அல்லது பணிக்குச் செல்லும்போதோ திரும்பும் போதோ மரணம் அடைந்தால் தொழில் சார்ந்த விபத்தாக கருதப்பட்டு குடும்பத்தினருக்கு சான்றோர் உதவி வழங்கப்படும்.
இறந்த காப்பீட்டாளரின் மனைவி மற்றும் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் ஆண் குழந்தைகளுக்கு 25 வயது வரையும் பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகும் வரையும் இந்த உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *