உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனை கூட்டம் லெப்டினென்ட்சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள முன்னாள் இராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார் .பொருளாளர் சிவகுமார், லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) மகேஷ் பாபு, சுபேதார் நடராஜ், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறை நிறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது . உறுப்பினர்களின்
பணிக்கால ஆவணங்கள் சரி செய்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்கள் வாழ்நாள் சான்றிதழ்கள் அளிப்பவர்கள் உடனடியாக அளித்து அவர்களுடைய பென்ஷன் நின்று விடாமல் பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. மருத்துவ உதவி கள் முறைப்படி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் முப்படையில் மாணவர்களை சேர்ப்பதற்கும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள்குறித்து விவாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் ராணுவ வீரருக்கு ஏற்பட்ட அவமரியாதை தவிர்க்கும் பொருட்டு அதனுடைய விவரங்கள் அறிய கூட்டத்தில் மோகன், லியாகத் அலிகான், சுப்பாத்தாள் மற்றும் முத்துக்காளை உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசிக்கப்பட்டது நிறைவாக முன்னாள் இராணுவ வீரர் உதவி செயலாளர் சுபேதார் நடராஜன் நன்றி கூறினார்.
உடுமலை : நிருபர் : மணி