பீளமேடு அண்ணா நகரில் உள்ள மாநகர் மாவட்ட திமுக செயலாளர் அலுவலகத்தில், வருகிற 15-8-2025 செவ்வாய்க்கிழமை இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலை, உப்பிலிபாளையம் அருள்மிகு. தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ள சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி அழைப்பிதழை, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களை, அருள்மிகு.தண்டுமாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சு. நாகலட்சுமி,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பா. ஸ்ரீ வத்சன், ரா.கலைமணி, ஜெ.மனோஜ்குமார், எஸ்.பத்ரசாமி, திருக்கோவில்செயல் அலுவலர் மு. பேபிஷாலினி ஆகியோர் சந்தித்து வழங்கினர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் உடனிருந்தார்.
கோவை செய்தியாளர் :சம்பத்குமார்
