Headlines

ராமாபுரத்தில் 2,000 பனை விதைகள் நட்டு விழா..வனத்துறை – கிராமபஞ்சாயத்து இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை..!

ராமாபுரத்தில் 2,000 பனை விதைகள் நட்டு விழா..வனத்துறை – கிராமபஞ்சாயத்து இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை..!

கன்னியாகுமரி, அக்.07:


இன்று காலை கன்னியாகுமரி வனக்கோட்டம் உதவி வனப்பாதுகாவலர் அவர்களின் தலைமையில், வனத்துறை மற்றும் ராமாபுரம் கிராமபஞ்சாயத்து சார்பில் MGNREGA பணியாளர்கள் இணைந்து பனை மர நட்டுப் பணிகள் நடைபெற்றன.

ராமசமுத்திரம் குளக்கரையில் மொத்தம் 2,000 பனை விதைகள் நட்டுவிடப்பட்டன.
சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும், நீர்வளத்தை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, உள்ளூர் மக்களால் பாராட்டப்படுகிறது.

வனத்துறை அதிகாரிகள், பனை மரங்கள் மழை நீர் உறிஞ்சுதலிலும், மண் அரிப்பைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தனர்.

தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் : பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *