திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த குதிரையாறு அணை மற்றும் புளியம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றன தொடர்ந்து மலை கிராமங்களில் வசித்து வரும் பொது மக்களுக்கும்
பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வருவாய்த் துறையின் மூலம் பளியர் இன சாதி சான்று வழங்க வேண்டும் என்று பலமுறை விண்ணப்பம் செய்து தொடர்ந்து வருவாய் துறையினர் விண்ணப்பங்களை நிராகரித்து வருகின்றனர்.
இதனால் பள்ளிகளில் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் படித்து முடித்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருவதால் உடனடியாக வருவாய்த் துறையினர் தங்கள் கிராமங்களை ஆய்வு செய்து தங்களுக்கு பளியர் இன சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து 30க்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் தங்களுக்கு உடனடியாக பளியர் இனத்திற்க்கான ஜாதி சான்றிதழ் தடையின்றி வழங்க வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும் மலை கிராமங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில் தமிழக அரசின் எவ்வித நலத்திட்ட உதவிகளும் முறையாக வருவதில்லை என்றும் கரட்டுப்பகுதியின் அடிவாரத்தில் வாழ்ந்து வருவதால் தங்களை மலைவாழ் மக்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்..
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி