திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சங்கராமாநல்லூர் கிராமம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு 20 பேர் கொத்தடிமை தொழிலாளர்களாக பணி புரிவதாக வரப்பெற்ற புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையீன் படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேற்படி நபர்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.
பின்பு மேற்படி நபர்கள் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் படி உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் அறிவுரையின் படியும், மடத்துக்குளம் வட்டாட்சியரின் வழிகாட்டுதலின் படியும் மடத்துக்குளம் நில வருவாய் ஆய்வாளர் தலைமையில் 2 கிராம நிர்வாக அதிகாரிகள், 1 கிராம உதவியாளர் அடங்கிய குழு செங்கல்பட்டு மாவட்டம் சென்று மதுராந்தகம் வட்டத்தில் இருந்தவர்கள் அழைத்து வரப்பட்டு உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் கொத்தடிமை விடுதலை சான்று மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட்டது.
