தென்காசி, பிப், 12
தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேரம் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் சு. கோபி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ரா.இசக்கித்துரை, கே.பாலசுப்பிர மணியன், மாவட்ட இணை செயலாளர் அ.அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சே. செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில செயலாளர்
இ.மைக்கேல் லில்லி புஷ்பம், தொடக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் வே. வெங்கடேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ பேச்சிமுத்து நிறைவுறை ஆற்றினார்.
தோழமை சங்கங்களின் சார்பில் பி.கே.மாடசாமி, பீ.ராஜசேகர், மார்த்தாண்ட பூபதி, சேகர், இரா.ராஜ், பா.சண்முகம், கணபதி ராமன், சின்ராஜ், மோகன்ராஜ், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே.புதியவன், அகஸ்தியன், மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், சுப்புராஜ்,
கே.மாரியப்பன், மணிகண்டன், துரைராஜ், க.மாரிமுத்து, முருகையா, மதன், கல்யாண சுந்தரம், ஆயிஷா பேகம், செந்தில் கணேசன், உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு;-
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமுல்படுத்த வேண்டும்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர். வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், MRB செவிலியர்,மக்கள்நல பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை தொகுப்பூதிய, மதிப்பூதிய நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் சட்டபூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் பூர்த்தி செய்து இளைஞர்களுக்கு காலமுறை ஊதிய நடைமுறையில் பணி வழங்கி நிரப்பிட வேண்டும்.
முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும். சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைபடுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். யுனைட்ெட இந்திய இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டணமில்லா சிகிச்சையினை உறுதிப்படுத்த வேண்டும்.
மருத்துவத்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட துறைகளில் தனியார் கம்பெனிகள் மூலம் புற ஆதார முகமை மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். காலமுறை ஊதிய நடைமுறையில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் குருவிகுளம் தர்மராஜ், செங்கோட்டை பண்டாரசிவன், பாலமுருகன்,தென்காசி செந்தில்வேல், கடையநல்லூர் கருப்பசாமி, ஆலங்குளம் சண்முகச் சாமி, வாசுதேவநல்லூர் கிருஷ்ணகுமார், மாரிச்சாமி, மேல நீலிதநல்லூர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட பொருளாளர் சு.வேல்ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.