மார்ச் ;-08
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்து மலை ஊரைச் சேர்ந்த பாடலாசிரியரும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவருமாகிய ஊ.வ.கணேசன் எழுதிய “RC School Anthem – ஆர்.சி.பள்ளி பாடல்” ஊத்துமலை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட அப்பள்ளியின் தாளாளர் அருள் மரியநாதன் பெற்றுக் கொண்டார்.
ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவர்களின் நடனத்தோடு அரங்கேற்றப்பட்ட இந்த பாடல் வெளியீடு நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் முதலிடம் பெற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கரங்களில் விருது பெற்ற பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.