திருநெல்வேலி, ஜூன்.27:-
தமிழ்நாடு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பாக, பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை சார்ந்த, தன் ஆர்வலர்களுக்கான பயிற்சி, இன்று [ஜூன்.27] திருநெல்வேலியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தார்! இந்த பயிற்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் 7, தூத்துக்குடி மாவட்டத்தில் 6, கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 என மொத்தம் 24 மையங்களில் இருந்து, மொத்தம் 72 தன் ஆர்வலர்கள் பங்கேற்று, பயிற்சி பெற்றனர்.
பயிற்சியை தொடர்ந்து, இவர்கள் அனைவரும் 3 மாவட்டங்களிலும் கடற்கரை பகுதிகளிலுள்ள பல்நோக்கு மையங்களுக்கு சென்று, ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேருக்கு, பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சியினை வழங்குவர்.
இந்த பயிற்சியில், தமிழ்நாடு பேரிடர் அபாயக்குறைப்பு முகமை உதவி ஆணையர் கே.நரசிம்மன், நெல்லை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் [பொது] அனிதா, பேரிடர் வட்டாட்சியர் சரவணன் உள்பட பலர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
