தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில்
வெறிநாய் கடித்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல்கூறி அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை குறித்தும் கேட்டறிந்தார். உடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனிதாபாலின் மற்றும் பணி மருத்துவர் சமீமா ஆயிஷா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் மற்றும் செவிலியர்கள் மற்றும் அப்சரா பாதுஷா முருகானந்தம் 18வது வார்டு பிரதிநிதி ஜப்பார் ஆகியோர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுவரை 12பேர் வெறி நாய்க்கடிக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வரும் வெறிநாய் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்
இப்ராஹீம்