உளுந்தூர்பேட்டை ஜூன் 24
பரிக்கல் அரசு உதவி பெறும் டேனிஸ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவித்து பரிசு வழங்கும் நிகழ்வு பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருநாவலூர் காவல் ஆய்வாளர் திரு . இளையராஜா கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை ஊக்குவித்து பாராட்டி பரிசுத்தொகை திருநாவலூர் காவல் ஆய்வாளர் திரு. இளையராஜா திருக்கரங்களால் வழங்கப்பட்டது
முதல் மதிப்பெண் எடுத்த காவியாவிற்கு காவல் உதவி ஆய்வாளர்கள் பழனிவேல், அழகு செந்தில் முருகன் முதல் பரிசும் இரண்டாம் மதிப்பெண் எடுத்த கீர்த்தனாவிற்கு திருநாவலூர் காவல் ஆய்வாளர் திரு. இளையராஜா இரண்டாம் பரிசு , மூன்றாம் மதிப்பெண் எடுத்த ஹாஜிரா பர்வீன் அவர்களுக்கு பெரும்பாக்கம் திருச்சபைச் செயலாளர் வெங்கடேசன் என்கிற காபிரேல் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் குமாரசாமி, ஹரி, அபிமன்யு, அவர்களும் பரிசினை வழங்கி சிறப்பித்தனர் .
பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர் பெருமக்கள், முன்னாள் மாணவர்கள், அம்மா அரசு மாவட்ட நிருபரும் முன்னாள் மாணவருமான பரிக்கல் ஐயப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் .R. அந்தோணிசாமி
