உடுமலை நவம்பர் 02.
உடுமலை அருகே அமராவதி முல்லைப் பண்ணை துவக்கி 50 ஆண்டுகளாகும் நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த சதுப்பு நில வாழ் முதலைகள் பராமரிக்கும் முதலைப் பண்ணை 1976 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இப்பண்ணையில் குட்டிகள் முதல் 70 வயதான முதலைகள் வரை உள்ளன.
மொத்தம் 101 முதல் 10 தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. அவற்றுக்கு மீன் மற்றும் இறைச்சி உணவாக வழங்கப்படுகிறது. முதலைகளின் வாழ்வியல் இயல்புகள் என அனைத்து தகவல்களும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
நுழைவு வாயில் முதல் வளாகத்தை சுற்றி வர அழகான புல் தரை மற்றும் முதலை களை பாதுகாத்துடன் ரசிக்கும் வகையில் கம்பி வலை, தடுப்பு பல வண்ண மலர் செடிகளை கொண்ட கொடிகள் என பூங்கா வடிவில் மாற்றப்பட்டுள்ளது. தத்துரூபமாக வடிவமைக்கப்பட்ட யானை, புலி, காட்டுமாடு, மான், இருவாச்சி பறவை சிற்பங்களும் உள்ளன.
மேலும் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் சேகரிக்கும் பொருட்கள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் ‘எகோ ஷாப்’ அமைந்துள்ளது. மாணவர்களும் பொதுமக்களும் முதலை குறித்த தகவல்களின் பொக்கிஷமாக இருப்பதால் மாநில சுற்றுலா பட்டியலில் அமராவதி முல்லைப் பண்ணை முக்கிய இடம் வைக்கிறது.
ஆண்டுக்கு 30, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணியர் அமராவதிக்கு வருகின்றனர். நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ, 10 சிறியவர்களுக்கு ரூ, 5 வசூலிக்கப்படுகிறது. முதலைப்பண்ணை துவக்கி 50 ஆண்டுகளாகும் நிலையில் பொன்விழா கொண்டாட்டங்களை துவக்க வேண்டும் சுற்றுலா
வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் முதலைப் பண்ணை, மற்றும் அமராவதி அணை பூங்காவை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
பல்வேறு மாநில சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பொன்விழா கொண்டாட வேண்டும் முதலை பண்ணையை சுற்றுலா வழிகாட்டியில் முக்கிய இடம்பெறும் வகையில் வனத்துறை, சுற்றுலாத்துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
