மக்களின் வீடு தேடி அரசுத்துறைகளின் சேவையை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் பத்தாயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறையில் மூலமாக 46 விதமான சேவைகளும் நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் மூலமாக 43 விதமான சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பாக ஜெகதளா பேரூராட்சி, குன்னூர் பகுதி, சோலடாமட்டம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாமில் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்து நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் நேரில் சென்று மேற்பார்வையிட்டார். இம்முகாமில் கூட்டுறவுத் துறையின் சார்பாக குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக சுயதொழில் கடன் கால்நடை பராமரிப்பு கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன் ஆகியவைகளுக்கான விண்ணப்பம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படன. இம்முகாமில் கூட்டுறவு சார்பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
