திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோவில் பின்புறம் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் TN20 CP. 7129 சாமி செப்டிக் டேங்க் என்ற பெயர் கொண்ட செப்டிக் டேங்க் லாரி மூலமாக கழிவுநீரை நகர்புறங்களில் உள்ள பொதுவெளியில் வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுசம்பந்தமாக வீடியோவில் உரையாடும் நபர் இது வெறும் கை கழுவும் தண்ணீர் தான் பழனி தேவஸ்தானம் மூலம் இந்த தண்ணீரை அகற்றி வருகிறோம் என்பதாக கூறியுள்ளார். மனித கழிவுகளை அல்லும் செப்டிக் டேங்க் வாகனத்தில் கை கழுவும் தண்ணீர் எனக்கூறி நாள்தோறும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத போது மனித கழிவுகளையும் செப்டிக் டேங்க் வாகனம் மூலம் இடும்பன் மலைக்கு பின்புறமாக உள்ள பொதுவெளியில் கொட்டி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலர் பாதிப்புக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது. இதுசம்பந்தமாக பழனி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேட்டை தடுத்த நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.