திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு 15-வது மானிய குழு நிதி, ஊராட்சி குழு உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி நிதியில் இருந்து ரூ 1 கோடி 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய் சக்தி நகர், ராயல் லட்சுமி நகர், மாதா லே-அவுட்,சாரதாமணி லே-அவுட்,எம்.ஜி.ஆர் நகர், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி.லே-அவுட், அருண் நகர், ஆர்.ஜி நகர், காந்திபுரம், வெங்கடேசா லே-அவுட் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கும், எம்.ஜி.ஆர் நகர், ராயல் நகர்,எஸ்.வி.புரம், வெஞ்சமடை பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்கும், எ.எல். அவென்யூ நகரில் பைப் லைன் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், கே.ஈஸ்வரசாமி எம்.பி, கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.நிகழ்வின் போது உடுமலை ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு, துணைத் தலைவர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை : நிருபர் : மணி