தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருத்தகங்களை, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி பகுதியில் முதல்வர் மருந்தவத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவார் சி.குருமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.