தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் மாவட்ட திட்டமிடல் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பரிவார் டெய்ரீஸ் அன்லைட் லிமிடெட் மற்றும் PDA அறக்கட்டளையின் பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான ஆவணங்கள் சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனுக்களை ஒப்படைக்க பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க பெருந்திரளாக கூடி இருந்தனர். அதில் பெரும் பாலான மக்கள் முதியவர்கள், அனைவரும் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை ஒப்படைத்துவிட்டு அவர்களது வைப்பு நிதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் செல்கின்றன.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
