Headlines

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.5:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர் பொது (தேர்தல்) அறிவுரையின்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2026, ஜனவரி 1-ஆம் தேதியினை, தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது.

அதற்கான கணக்கெடுப்பு பணிகளுக்கு, வீடு தோறும் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சாந்திநகரில், படிவங்கள் வழங்கும் பணிகளை, நேற்று (நவம்பர். 4) நேரில் பார்வையிட்டு “ஆய்வு” செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- “இம்மாவட்டத்தில், மொத்தமுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து, மொத்தம் 1490 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை கண்காணிக்க, 168 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து தொகுதிகளிலும், 18 உதவி வாக்காளர் பதிவு அலவலர்களும், 5 வாக்காளர் பதிவு அலுவலர்களும், இப்பணிகளை மேற்பார்வையிட்டு, வருகின்றனர்!”- இவ்வாறு, மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவித்தார். இதற்கிடையே, முதல் நாளான நேற்று (நவம்பர்.4) பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சாந்திநகர், திருநெல்வேலி தொகுதி அம்மன் சன்னதி தெரு, அம்பாசமுத்திரம் தொகுதி சேரன்மகாதேவி ஆலடி தெரு, நாங்குநேரி தொகுதி களக்காடு சிங்கம்பத்து, ராதாபுரம் தொகுதி வள்ளியூர் அண்ணா நகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு, அந்தந்த தொகுதிமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *