நாகர்கோவில் : 09-09-2025
நாகர்கோவில் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையம் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு, தொற்றுநோய் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.
சுகாதார அதிகாரிகள் மெளனம்
பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலையில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
ஆனால், சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கின்றனர் என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
“இந்த அவலநிலையை கருத்தில் கொண்டு நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சுகாதாரத்துறை உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
