தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் எல்லா அருவிகளிலும் மழை வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் குளிக்க தடை விதித்தும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் முழு கட்டுப்பாட்டில் 24 மணி நேரமும் அருவி பகுதியை கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 3 வயதுடைய காட்டு யானை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது இந்த யானை மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு குற்றாலம் மெயின் அருவி மூலமாக கீழே விழுந்து அடிபட்டு இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையும் காவல்துறையும் மாவட்ட வன காவலர் அறிவுறுத்தலின்படி யானையை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சம்பவ இடத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகும் தகவல் வெளிவந்துள்ளது இந்நிலையில் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.