கன்னியாகுமரி, டிசம்பர் 7:
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கோட்டார் கிளை இணைந்து நடத்தும் “நிமிர்” திட்டத்தின் கீழ் போக்சோ சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை கோட்டார் Y.M.J அலுவலக மேல் தளத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களின் வழிகாட்டுதலின் படி, நிமிர் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் திருமதி சாந்தகுமாரி (AHTU), நாகர்கோவில் உமன் போலீஸ் பிரிவு தலைமை காவலர் ஜெயந்தி, ஆஷா பிரியா, சுமதி உள்ளிட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விரிவான விழிப்புணர்வை வழங்கினர்.
போக்சோ சட்டம் என்றால் என்ன, அதன் அவசியம், குழந்தைகள் மீதான குற்றங்களைத் தடுக்கும் நடைமுறைகள் எனப் பல முக்கிய அம்சங்கள் பொதுமக்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டன.
கூட்டத்தில் பெருமளவில் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு காவல்துறை சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
மாவட்ட கண்காணிப்பாளரின் “நிமிர் திட்டம்” இஸ்லாமிய பெண்கள் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
