நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலுல் 412 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகிறது.
இதில் 323 முழுநேர நியாய விலைக் கடைகளும் 89 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் (44 நடமாடும் நியாய விலைக் கடைகள்) இயங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் 2,19,772 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் தகுதியுள்ள குடும்ப
அட்டைதாரர்களின் விவரம் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்.
18 வயதிற்குட்பட்டவர்களையும், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள். ஒருநபர்மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்
மூன்றாம் நபரின் உதவி தேவைப்படும் குடும்ப அட்டைதாரர்கள்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 270 கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 391 நியாய விலைக் கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதி வாய்ந்த 15,369 குடும்ப அட்டைகளில் 18 வயதிற்கு கீழ் உள்ள 205 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் 1150 பயணாளிகளுக்கும், 70 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 17,974 பயனாளிகளுக்கும் மொத்தம் 19,329 பயனாளிகளுக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள புதுமந்து நியாய விலைக் கடையில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்கள் மாண்புமிகு அரசு கொறடா அவர்களால் வழங்கப்பட்டு இத்திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.
