ஆக் 25, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையின் அவசர பணிகளை வேகமாகச் செய்யும் நோக்கில் ‘குயிக் ரெஸ்பான்ஸ் டீம்’ (Quick Response Team) வாகனம் இன்று (ஆகஸ்ட் 25) அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வாகனத்தை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தின் எந்தப் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டாலும், அதற்கு உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்கச் செய்வதற்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படவுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
