தமிழீழ விடுதலைப் போர் 1987-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், மிக உச்சத்தில் இருந்த நிலையில், திடுமென இந்திய அப்போதைய பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி அதில் தலையிட்டு, இலங்கையின் அப்போதைய குடியரசு தலைவர் ஜெயவர்த்தனாவோடு ஓர் ஒப்பந்தம் போட்டு, “இரு தரப்பாருக்கும் இடையே, அமைதியை நிலைநாட்ட போகிறோம்!” என அறிவித்து, இந்திய படையை அங்கே அனுப்பி வைத்தார்.
ஆனால், ஒப்பந்தப்படி இலங்கை அரசு நடக்காமல், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும், ராணுவ தாக்குகுதலை மேற்கொண்டது.
எதிர்பாராத இந்த தாக்குதலை நிறுத்தக் கோரியும், ‘மீள் குடியமர்த்தம்’ என்ற பெயரில், தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களைத் தடுக்கவும், சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, தமிழர்களை விடுதலைச் செய்யவும், அவசர கால சட்டத்தைத் தளர்த்தவும், “ஊர்க்காவல் படை” என்ற பெயரில், சிங்களக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழர் பகுதிகளில் புதிதாக ஏற்படுத்தப்பட்டு வந்த, சிங்கள காவல் நிலையங்களை மூடவும், இந்திய இலங்கை ஒப்பந்த சொத்துகளை சரியாக கடைப்பிடிக்கக்கோரியும், இந்திய அரசை வலியுறுத்தி புலிகள் அமைப்பின் முதன்மைத் தளபதி 27 வயதே நிரம்பிய திலீபன், ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல், பட்டினி போராட்டத்தை தொடங்கி, அஹிம்சை வழியில் இந்திய விடுதலையை வென்றெடுத்த, மகாத்மா காந்தியின் வழியில், “காந்தியின் தேசமே கண்விழி! ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு முடிவு கட்டு!” என முழங்கியடி, திலீபன் தன்னுயிரை இழந்தார்.திலீபனின் நினைவு தினமானது “வீரவணக்க நாள்” ஆக, இன்று (செப்டம்பர். 26) “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு” சார்பாக கடைபிடிக்கப்பட்டது.
திலீபனின் திருவுருவப்படத்திற்கு, “மலர் மாலை”அணிவித்தும், “மலர்” தூவியும், மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின், திருநெல்வேலி மண்டலத் தலைவர் கண்மணிமாவீரன் வேளாளர், தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, பாட்டாளி மக்கள் கட்சி மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் அ.வியனரசு கலந்து கொண்டு, “வீரவணக்கம்” செலுத்தினார்.
இந்த நிகழ்வில், அகரத் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார், ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் செயலாளர் கு.சேரன்துரை, பொருளாளர் கி.நடராசன், பா.ம.க.மகளிர் அணி செயலாளர் இர.தமிழ் மதி,புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் களக்காடு நெல்சன், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க செயலாளர் ஐகோ, கட்டடத் தொழிலாளர் சங்க செயலாளர் முத்துக் குமார், ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் சரவணன், த.ம.மு க. நிருவாகிகள் பரமசிவன், மணிமாறன், பரமசிவம், நாம் தமிழர் கட்சி சார்பில் மோகன்குமார்,சுரேசு குமார், செல்வக்குமார், வழக்குரைஞர் பிரதீப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில், சர்மிளா அனைவருக்கும் “நன்றி” கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்.
