தென்காசி செப்டம்பர் 10-
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் சுமை தீர்ந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் சுமை தீர்ந்தபுரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சுமை தீர்ந்த புரம் பஞ்சாயத்து தலைவர் குட்டி என்ற அருணாச்சலம் தலைமை தாங்கினார் தென்காசி ஒன்றிய கவுன்சிலர் செல்வ விநாயகம் மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் ஆகியோர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் உடனுக்குடன் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமில் இப்பகுதியைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண பட்டது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பிடத்தக்கது அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிவது சிறந்த செயல் என தமிழக அரசை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கொட்டா குளம்கிளைச் செயலாளர் பரமசிவன் ராமர் மற்றும் சண்முகராஜ் தாசில்தார் தெய்வ சுந்தரி வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பார்வதி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் முகம்மது
இப்ராஹிம்
