Headlines

இளங்கடை தெற்கு புது தெருவில் குடிநீர் பற்றாக்குறை நாகர்கோவில் மாநகராட்சியில் மனு அளித்த நாகர்கோவில் விசிக..

இளங்கடை தெற்கு புது தெருவில் குடிநீர் பற்றாக்குறை நாகர்கோவில் மாநகராட்சியில் மனு அளித்த நாகர்கோவில் விசிக..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இளங்கடை தெற்கு புது தெரு பகுதியில் நீண்ட நாட்களாக கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சியின் மூலம் சீரான குடிநீர் வழங்கப்படாததால், குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையும் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சௌத்ரி தலைமையில் அம்பேத்வளவனுடன் நாகர்கோவில் மாநகர மேயர் ரே. மகேஷ் அவர்களிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *