, ஆக.17 –
கூட்டுறவு இணைப் பதிவாளராக பணியாற்றிய நடுக்காட்டு ராஜா, பணியை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாகர்கோவில் ஜூன்-2 நீதிமன்றத்தில் நீதிபதி முன் நடைபெற்றது. விசாரணைக்காக அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உட்பட 11 பேர் நேரில் ஆஜராகினர்.
எனினும், எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவர் மீது மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அரசியல் வட்டாரங்களில் தீவிரம் அதிகரித்துள்ளது.
குமரி மாவட்ட செய்தியாளர்
பாவலர் ரியாஸ்
