ஆக் 22, கன்னியாகுமரி
திருவனந்தபுரம்: குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில்களின் நீட்டிப்பு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.
புதிய கோட்ட மேலாளரை சந்திப்பு திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளராக புதியதாக பொறுப்பேற்ற திவ்யகாந்த் சந்திராகர் அவர்களை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சந்தித்தார்.
மக்கள் நலனுக்கான கோரிக்கைகள் இந்த சந்திப்பில் குமரி மாவட்ட மக்களின் சார்பாக பல்வேறு ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.
வசதிகள் விரைவில் ஏற்படுத்த வேண்டும் மாவட்ட மக்களின் சிரமங்களை குறைத்து, சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ரயில்வே துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
