நெல்லை மாநகர காவல்துறையினருடன் இணைந்து, அனைத்து பணிகளிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிற, திருநெல்வேலி ஊர்காவல் படையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இடைவெளி எதுவுமின்றி தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிற, ஊர்காவல் படையினர் 20 பேருக்கு, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா நற்சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினார். அப்போது, மாநகர காவல் தலைமையிடத்து, துணை ஆணையர் G.S.அனிதா, ஊர்க்காவல் படை வட்டார தளபதி சின்னராஜா மற்றும் ஊர்காவல் படையினர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்