செப் 8, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், கடல் நடுவே நிறுவப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் கண்ணாடி விரிசல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகளை அந்தப் பாலத்தில் அனுமதித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், உடனடியாக வல்லுநர் குழுவை அமைத்து பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகின்றன.
கன்னியாகுமரி நகர நிருபர் : செலிஸ்
