பழனி, ஜனவரி : 08,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ_3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து. பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் சாலையில் உள்ள அமுதம் அங்காடி நியாய விலை கடை எண் 2ல் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கி துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பழனி கோட்டாட்சியர், உணவு வழங்கல் துறை வட்டாட்சியர், நகர கழக செயலாளர் வேலுமணி, நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, நகர் மன்ற உறுப்பினர்கள், நகர, கழக வார்டு கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பழனி செய்தியாளர்.நா.ராஜாமணி : 8973350663
