கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முழு மாவட்டத்திலும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 78 சிறப்பு சோதனை அணிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
Highway Patrol, Crime Control Patrol, Emergency Response Patrol, Tourist Patrol, Mobile Patrol போன்ற பல்வேறு பிரிவுகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றன. மதுவில் மிதந்து வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் ஓட்டுதல், குறைந்த வயதுடையவர்கள் வாகனம் ஓட்டுதல் போன்ற சட்ட மீறல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 281 BNS Act மற்றும் 199 MV Act கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் Breath Analyser சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விழாக்காலத்தில் கடைகள், மால்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவதுடன், Road Side Parking கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், IPS அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
