திருநெல்வேலி,நவ.10:- திருநெல்வேலி சந்திப்பு ஏஐடியூசி அலுவலகம் அமைந்துள்ள, “பாலன்” இல்லத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பேரவை கூட்டம், மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் இன்று [நவ.10] நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணசாமி சங்க செயல்திட்டங்கள் பற்றி, விரிவாக பேசினார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.சடையப்பன், நிர்வாகிகளை வாழ்த்தியும், நெல்லை மாவட்ட மாநாடு நடத்துவது பற்றியும், உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் இசக்கிராஜ், ராஜேஷ், வட்டார தலைவர் சுதா,
வட்டார செயலாளர் கண்ணன், பொருளாளர் பொன்னுத்தாய் தம்பிராட்டி, துணை நிர்வாகிகள்,
சுகாதார ஊக்குனர்கள், தூய்மை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட மாநாடு “வரவேற்பு குழு” கூட்டம் நடைபெற்றது.
மாநாடு வரவேற்பு குழு கவுரவ தலைவராக கோவிந்தன், வரவேற்பு குழு தலைவராக ஆர்.சடையப்பன்,
வரவேற்பு குழு செயலாளராக பரமசிவம், மாநாட்டு வரவேற்பு குழு பொருளாளராக சுதா, வட்டார ஒருங்கிணைப்பாளர், பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர், 25 துணை தலைவர்கள்,
25 துணை செயலாளர்கள் என, மொத்தம் 54 பேர்களை கொண்ட “வரவேற்பு குழு” அமைக்கப்பட்டது. கூட்டத்தில், சுமார் 100 கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.