திருநெல்வேலி,நவ.5:-
மூத்த தமிழ் அறிஞர், உ.வே.சா. அவர்களின் மாணவர், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியர், திராவிட இயக்க தலைவர்களான பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரின் ஆசிரியர், அறுபதுக்கும் மேற்பட்ட, தமழ் நூல்களை எழுதியவர்-என, பன்முகத்தன்மை கொண்ட நெல்லை கா.சு. பிள்ளையின், 137 -வது பிறந்த தினமான இன்று (நவம்பர்.5) அதிகாலை, திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ள, அன்னாரது நினைவு கல்வெட்டுக்கு, திருநெல்வேலி “தமிழ் இலக்கிய அமைப்புகள்” சார்பில், மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பாரதி முத்தமிழ் மன்ற மாவட்ட செயலாளர் “முனைவர்” கோ.கணபதி சுப்பிரமணியன், தமிழ் நலக் கழக நெல்லை மாவட்ட செயலாளர் மற்றும் கலை பதிப்பக ஆசிரியர் “கவிஞர்” பாப்பாக்குடி இரா.செல்வ மணி, திருநெல்வேலி மண்டல முன்னாள் சேர்மன் வெங்கட சுப்பிரமணியன், சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணை செயலாளர் சு.முத்துசாமி, தென் பொதிகை எழுத்தாளர் கூட்டமைப்பு செயலாளர் தியாகராஜன், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் புன்னை செழியன், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் சங்க மாநில தலைவர் “கவிஞர்” ந.சுப்பையா, “நிழல்” இலக்கிய தளம் கவிஞர் பிரபு, பாரதியார் உலகப் பொதுச் சேவை நிதிய செய்தி தொடர்பாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்பு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
