Headlines

தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தென்காசி அக்டோபர் – 21 -தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் தந்தையான சண்முகையா என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் என்பவர் தன்னை வாரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சண்முகையாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்கு இறந்து போன சண்முகாவின் மனைவி மாரியம்மாள் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கொடுத்த புகார் மனு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொலை குற்றம் உறுதி செய்யப்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் இன்று டேவிட்டுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூபாய் 2000/- விதிக்கப்பட்டது. அவர் அதை கட்ட தவறினால் மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *