Headlines

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது பெற்றுள்ள பேராசிரியரை, பாராட்டி வாழ்த்திய துணை வேந்தர்!

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது பெற்றுள்ள பேராசிரியரை, பாராட்டி வாழ்த்திய துணை வேந்தர்!

திருநெல்வேலி,அக்.24:-

ஒன்றிய அரசால், “தேசிய” அளவில், “சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்” ( BEST NSS OFFICER) ஆக, “தேர்வு” செய்யப்பட்டுள்ள, திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியான, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் “விவேகானந்தா” கலை- அறிவியல் கல்லூரியின், “நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்” பேராசிரியர் “முனைவர்” ஜெயக்குமாரி அதற்கான விருதினை, “குடியரசுத்தலைவர்” திரௌபதி முர்மு அம்மையாரிடமிருந்து, கடந்த 6-ஆம் தேதி புதுதில்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில், பெற்றுக் கொண்டார்.

தமிழ் நாட்டிலிருந்து, இந்த விருதினைப் பெற்றுள்ள ஒரே ஒரு நபர் இவர் மட்டுமே என்பது, குறிப்பிடத்தக்கதாகும். விருது பெற்று ஊர் திரும்பியுள்ள முனைவர் ஜெயக்குமாரியை, பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ந. சந்திர சேகர், இன்று (அக்டோபர். 24) காலையில், நெல்லை அபிஷேகப்பட்டியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்துக்கு நேரில் அழைத்து, வெகுவாகப் பாராட்டினார்.

அத்துடன், தம்முடைய மனமுவந்த வாழ்த்துக்களையும் “முனைவர்” ஜெயக்குமாரிக்கு தெரிவித்த “துணைவேந்தர்”, ஒனறிய அரசின் “விருது” வாயிலாக, பல்கலைக்கழகத்துக்கு “பெருமை” சேர்த்ததற்காக, தம்முடைய நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

அப்போது, பல்கலைக்கழகப் பதிவாளர் “முனைவர்” ஜே. சாக்ரட்டீஸ், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருஙகிணைப்பாளர் “முனைவர்” வி.வெளியப்பன் ஆகியோர், உடனிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *