உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உடுமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 19 விவசாயிகள் 143 மூட்டை அளவுள்ள 7 ஆயிரத்து 150 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.அதன்படி முதல் தர கொப்பரை ரூ 125.69 முதல் ரூ 130 வரையிலும் 2-ம் தர கொப்பரை ரூ 102.26 முதல் ரூ 116.99 வரையில் ஏலம் போனது.இந்த தொகையானது விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதால் மறைமுக ஏலத்திற்கு அதிகளவில் கொப்பரையை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று கொப்பரையும் அதிக அளவில் வந்தது. அதன் தரத்திற்கு ஏற்றவாறு விலையும் கிடைத்தது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உடுமலை : நிருபர் : மணி