மாதவரம் தொகுதிக்குப்பட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் இன்று மாதவரத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில், உணவு தயாரிக்கும் பணிகளை மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் துக்காராம், மாதவரம் மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர் புழல் அன்பரசு உடனிருந்தனர்.
நமது நிருபர்