திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அடிவாரம் வீதியில் நடைபெற்றது. சூரனை வதம் செய்த பிறகு அனைத்து ‘சூரன்’ தலைகளும் ஆதிகாலம் தொட்டு பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். உடல் பகுதி ‘பெரிய நாயகி அம்மன்’ கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வருடமும் பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களிடம் உள்ள தலை பகுதியையும், கோவிலில் உள்ள உடல் (முண்டம்) பகுதியையும் சூரசம்ஹாரத்திற்கு சிலநாள் முன்பாக சுத்தம் செய்து பூச்சு, வர்ணங்கள் பூசப்பட்டு பராமரிப்பு செய்த பிறகு கோவிலில் இருந்து சூரனை வதம் செய்யும் பகுதிக்கு எடுத்து செல்வது வழக்கமாகும். வருடம் முழுவதும் பராமரிப்பு செய்து அவற்றை பாதுகாப்ப செய்து வருவது பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியில் பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியது. பழனி கோயில் ஊழியர்கள் அந்த பணிகளை ஈடுபடுவதில்லை. பழனி முருகனுக்கு பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினரால் காலம் காலமாக செய்துவரும் சம்பிரதாயமாகும். உண்மைக்கு புறம்பான செய்தியை மாற்றி வெளியிட்டதில் சம்பந்தப்பட்ட சமூகத்தினருக்கு வருத்தம் அளிப்பதாக கூறினர்.
செய்தியாளர் : நா.ராஜாமணி