கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், நேற்று(13.01.26) அன்று,கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில், வ.உ.சி. மைதானம் அருகே சிறப்பாக நடைபெற்ற திராவிட பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கணபதி பகுதி சார்பில் கலந்து கொண்டவர்கள் சிறப்பான வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர்.

இப்போட்டியை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் திரு,கணபதி ராஜ்குமார், வணக்கத்துக்குரிய கோயமுத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி,இரங்கநாயகி ராமச்சந்திரன், கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் திரு,கோட்டை அப்பாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

வெற்றி பெற்ற கணபதி பகுதி போட்டியாளர்களுக்கு, கோவை மாநகர் மாவட்ட பொறுப்ளர்திரு,துரை செந்தமிழ்ச் செல்வன் கோவை மாநகராட்சி வணக்கத்துக்குரிய மேயர் இரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் கணபதி பகுதி பொறுப்பாளர் திருசெ. ராமச்சந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர் மேலும் ஏராளமான கழக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத்குமார்.
