நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கடை எண் 3ல் கோத்தகிரி மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சொந்த தயாரிப்புகளுக்கான விற்பனை மையம் நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

சங்கத்தின் விற்பனை பொருளான மலைத்தேனினை கொள்முதல் செய்து முதல் நபராக மண்டல இணைப்பதிவாளர் விற்பனையை துவங்கி வைத்தார்.
இந்த விற்பனை மையத்தில் மலைத்தேன், சாம்பிராணி, மிளகு, கிராம்பு, குளியல் சோப், பினாயில், லிப் பாம் உள்ளிட்ட பல்வேறு வகையான சொந்த தயாரிப்பு பொருட்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை திரு. சி. அய்யனார், துணைப் பதிவாளர்/மேலாண்மையை இயக்குநர் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் தா. முத்துக்குமார், லேப்ஸ் சங்கத்தின் நிர்வாக குழு தலைவர் சிவலிங்கம், சங்கத்தின் செயலாளர் கே. பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
