உடுமலை : டிசம்பர், 06.
டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் SDPI கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி உடுமலை நகரம் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி தலைவர் M.காதர் பாட்ஷா தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் Aமுஹம்மது யாஸீன் வரவேற்புரை நிகழ்த்தினார். மக்கள்திரள் ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு, திமுக நகரக் கழகச் செயலாளர் C.வேலுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் M.சதிஷ் , தமிழ் புலிகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன், கட்சியின் மாநில பொருளாளர் A.முஸ்தபா, கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுச் செயலாளர் A.சாஹுல் ஹமீது, மஸ்ஜிதே நூருல் இஸ்லாம் தலைமை இமாம் ஹாஃபிழ் M.S சம்சுல் இக்பால் தாவூதி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் அமீர், பொதுச்செயலாளர் இக்பால், மாவட்ட ஊடக அணி தலைவர் அப்பாஸ் மற்றும் மாவட்ட தொகுதி, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள், ஜமாத்தார்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இறுதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மடத்துக்குளம் தொகுதி செயலாளர் அப்துல் பாரி நன்றி தெரிவித்தார்.
