திண்டுக்கல், மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார் நத்தம் பிரிவில் லாரி சாலையை கடந்தது அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இடிப்பது போல் அருகாமையில் வந்தது இதனால் லாரி டிரைவர் மற்றும் தனியார் பேருந்து டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் தனியார் பேருந்து டிரைவர் லாரி டிரைவரை கம்பியால் தாக்கியதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பேருந்து டிரைவர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தை வழிமறித்ததோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரி ஓட்டுனரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்