Headlines

நீலகிரி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டம் ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டம் ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நீலகிரி மாவட்ட திமுக கூட்டம் உதகை ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அனைவரையும் வரவேற்றார்.

தமிழக அரசின் தலைமை கொறடா கா.ராமசந்திரன் திமுக உயர்நிலை செயல்டதிட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார் (கூடலூர்), கோவை திராவிடமணி (குன்னூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா தொடர் நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்துவது எனவும், 2026 சட்டமன்ற தேர்தலில் உதகை,கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மகத்தான வெற்றிபெற உழைப்பது எனவும், நீலகிரி மாவட்டத்தில் நகர ஒன்றிய பேரூர் கழக அமைப்புகளில் கழக செயல்வவீரர்கள் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், திராவிடமணி, காசிலிங்கம், செந்தில் ரங்கராஜ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா,ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத்அலி,பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், பிரேம்குமார், நெல்லை கண்ணன், பீமன், சிவானந்தராஜா,சுஜேஷ், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, தொரை, பில்லன், ராஜேந்திரன், உதயதேவன், செல்வம், அமிர்தலிங்கம், ராஜா, மோகன்குமார், வீரபத்திரன், காளிதாசன், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜ், முத்து, சுந்தர்ராஜ், சஞ்சிவ்குமார், ரமேஸ்குமார், சுப்ரமணி, சின்னவர், காளிதாஸ், மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், கோமதி, ராஜா, காந்தல்ரவி, எல்கில்ரவி, ராம்குமார், ராமசந்திரன், செல்வராஜ், ஆலன், விவேகானந்தன், ஆல்வின், செந்தில்நாதன், ஜெயந்தி, வெங்கடேஷ், சிவசுப்ரமணியம், ரஹமத்துல்லா, சீனி, சுரேஷ், அன்வர்அப்துல்லா, உமாநாத், ஜெயகுமார், செந்தில்நாதன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நௌபுல், பாபு, நாகராஜ், பத்மநாபன், முரளிதரன், வினோத்குமார், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, பரிமளா, சிவகாமி, சுசிலா, முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் ஜெயகுமாரி, கௌரி, ஹேமமாலினி, சத்தியவாணி, ராதா, சித்ராதேவி, பங்கஜம், வள்ளி, பேபி மற்றும் தொமுச ஜெயராமன், நெடுஞ்செழியன், உட்பட நகர-ஒன்றிய-பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

கூட்ட முடிவில் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *