திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேடியன் பின்சர்வ் கோல்டு லோன் ,கீதா கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கீதா கண் மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் ராஜ் கணேஷ் தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் . முன்னதாக இல்லம் தேடி இலவச கண் பரிசோதனை என்ற நோக்கத்தின் அடிப்படையில் கீதா கண் மருத்துவமனை சேவை செய்து வருகிறது. இதனிடையே இந்த முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டவர்களில் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை உடன் கண் புறை நீக்கும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் இந்நிகழ்விற்கு ரேடியன் பின்சர்வ் கோல்டு லோன் கார்த்திகேயன் முன்னிலை வகிக்க, நாகரத்தினவேல் ,வர்ஷா, தனலட்சுமி ,சுரேஷ்குமார் தங்கம் மற்றும் லயன் மணிமுத்து , விஜயராகவன்,விக்டர் மற்றும் நிர்வாகிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி.